Anbe Unnodu Sernthu Nadantha Podhu Varaatha Mazhai.
Unnai Pirinthu Sellum Podhu Varuvathu Eano?
En Kanner Thulikalai Maraikkava!
Advertisement
Anbe Unnodu Sernthu Nadantha Podhu Varaatha Mazhai.
Unnai Pirinthu Sellum Podhu Varuvathu Eano?
En Kanner Thulikalai Maraikkava!
ஒரு நாள் நீ புரிந்துகொள்வாய்
என் காதல் உண்மையானது என்பதை…
ஒரு நாள் நீ புரிந்துகொள்வாய்
உன் அருகில் நான் இல்லை என்பதை…
ஒரு நாள் நீ புரிந்துகொள்வாய்
என்னை விட்டு ஏன் விலகினாய் என்பதை…
ஒரு நாள் நீ புரிந்துகொள்வாய்
உன்னை விட்டு விலகும் போது
எனக்கு எவ்வாறு வலித்தது என்பதை…
அந்த நாள் நீ என்னை நேசிப்பாய்
என்னைப் போலவே
காலம் எம்மை
கசக்கி எடுத்தாலும்,
கவலை எம்மை
கண்ணீரில் நனைத்தாலும்,
துன்பம் எம்மை
தூங்க மறுத்தாலும்,
கண்ணீர் எம்மை
கலங்க வைத்தாலும்,
பிரிவு எம்மை
பிழிந்து எடுத்தாலும்,
வாழ்க்கை எம்மை
வாட்டி வதைத்தாலும்,
விதி எம்மை
விரட்டி அடித்தாலும்,
விதியை விதிவிலக்குவோம்,
விடியல் எம் கையில்,
விடியலை தேடி வாழ்வோம்.
மெழுகுவர்திக்கு
உயிர் கொடுக்க
உயிர் விட்டது தீக்குச்சி..
அதை நினைத்து நினைத்து
உருகியது மெழுகுவர்த்தி
விடியும் வரை தெரிவதில்லை கண்டது கனவு என்று….
வாழ்க்கையும் அப்படி தான்….
முடியும் வரை தெரிவதில்லை….
வாழ்வது எப்படி என்று…
தோல்வி இன் அடையாளமும் “தயக்கம்”
வெற்றி இன் அடையாளமும் “துணிச்சல்”
துணிந்தவர் தோற்றதில்லை,
தயங்கியவர் வென்றதில்லை..
தோல்வி இன் அடையாளமும் “தயக்கம்”
வெற்றி இன் அடையாளமும் “துணிச்சல்”
துணிந்தவர் தோற்றதில்லை,
தயங்கியவர் வென்றதில்லை
வேதங்கள் நான்கு…
பூதங்கள் ஐந்து….
நாதங்கள் ஏழு….
மாதங்கள் பன்னிரண் டு… …
இத்தனையும் இருந்தாலும்
பித்தனாம் மனிதனிடம்
எத்தனையோ பேதங்கள்….
எத்தனையோ பாவங்கள்….
அத்தனையும் மானுடத்தை
ஆட்டி வைக்கும் சாபங்கள்..
வாழ்கை என்னும் ஒற்றை வழிப்பாதையில்
பயணிக்கும் பொழுது வழியில் — நீ
வழித்துணையாக நான் உன்னை
கூட்டி செல்கையிலே இடையில்
முட்புதர் நாம் பிரிந்து செல்ல வேண்டிய நேரத்தை அறிவுறுத்த
…நம் பயணம் பிரிந்தே செல்கிறது…………..
பாதைகள் மாறலாம் பயணங்கள் முடிவதில்லை….
நிஜங்கள்” தரும் சந்தோசத்தைவிட, “நினைவுகள்” தரும் சந்தோசம் அதிகம் !.
“நிஜங்கள்” நிலைப்பதில்லை !!. “நினைவுகள்” அழிவதில்லை
நிலவுக்கு வான் சொந்தம்
வானுக்கு மண் சொந்தம்
மண்ணுக்கு நீர் சொந்தம்
நீருக்கு மீன் சொந்தம்
…மீனுக்கு உயிர் சொந்தம்
உயிருக்கு மனிதன் சொந்தம்
மனிதனுக்கு மனம் சொந்தம்
மனதுக்கு இதயம் சொந்தம்
இதயத்துக்கு காதல் சொந்தம்
காதலுக்கு கண்ணீர் சொந்தம்
கண்ணீருக்கு நான் சொந்தம்
எனக்கு உன் நட்பு சொந்தம்
பிரிவை நினைத்து கவலை படதே:
இமைகள் பிரியும் போது தான்
கண்களால் காட்சிகளை காண முடிகிறது…………
…உதடுகள் பிரியும் போது தான்
உள்ளத்தில் இருப்பதை வெளியே சொல்ல முடிகிறது..
அன்பில் அமைதியைத் தேடு
இளமையில் கல்வியைத் தேடு
ஒற்றுமையில் பலத்தைத் தேடு
கோபத்தில் பொறுமையைத் தேடு!
பயணத்தில் விவேகத்தைத் தேடு
சிந்தனையில் அறிவைத் தேடு
சிரிப்பில் ஆரோக்கியத்தைத் தேடு
தோல்வியில் முயற்சியைத் தேடு!
நட்பில் நம்பிக்கையைத் தேடு
கற்பனையில் கவிதையைத் தேடு
வேதனையில் உறுதியைத் தேடு
வாழ்க்கையில் நீ உன்னைத் தேடு
கண்ணீர் சிந்திடும்
கண்களை விட
அதை மறைத்து
புன்னகை செய்யும்
இதழ்களுக்கோ
வலி அதிகம்.
பழகிய சில நாட்களிலே தொலைந்து போன
உன் நினைவுகளை ….
காலம் தான் மறக்க வைக்கும் என நினைக்கையிலே………..
காற்றலையில் மிதந்து வரும்
காலங்களே அடிக்கடி அதை நினைவு படுத்தி என் மனதை கலங்க வைப்பது எதற்காக
வாழ்தத்துவது முக்கியமல்ல, வாழ்ந்து காட்டுவதே! முக்கியம் நம்மை தோற்கடித்ததாக நினைக்கும் துரோகிகளுக்கு முன்பே இருந்து வாழ்ந்து காட்டனும் அப்போவாவது புரியட்டும்
வெற்றிகளை சந்தித்தவணின் இதயம் பூவைப்போல் மென்மையானது..!
தோல்விகளை மட்டுமே சந்தித்தவணின் இதயம் இரும்பை விட வலிமையானது … . . . .அதனால தோற்பது வெற்றிப்பெறதான் காதல் தோல்வி அடைவதால் தோல்வியே வாழ்கை ஆகாது
சொந்தத்தில் வந்தது பாசம்
கற்பனையில் வந்தது கவிதை
சோகத்தில் வந்தது கண்ணீர்
துக்கத்தில் வந்தது கனவு
தனிமையில் வந்தது உன் நினைவு.
பணம் தேடும் உலகிலே குணம் தேடல் குறைந்ததே! தினம் ஓடும் வாழ்விலே மனம் மரித்தேப் போனதே! நிதம் நடிக்கும் நிலையிலே நித்திரைகள் எங்கோ தொலைந்ததே! நாம் வாழும் வாழ்க்கையிலே நியாயங்கள் நின்று நிலைக்குமா? மனம் குன்றிய தேசத்தில் மகிழ்ச்சிகள் மீண்டும் கிடைக்குமோ?
என்னவளே…
என்னில் உன்னை
நினைத்த நாள் முதல்…
என் இதயத்தில்
உன்னையும்…
கண் இமையில் என்
உயிரையும் வைத்திருகிறேனடி…
உன்னை எத்தனை நாள்தான்
என்னில் நான் சுமப்பேன்…
உனக்கு நியாயமா…?
நான் கண்களை
மூடுமுன்…
உன் முடிவுதனை
சொல்வாயா…
நான் நிலவை
ரசித்திருந்தால்…
சில கவிதைகள்
எழுதிருப்பேன்…
பூக்களை ரசித்திருந்தால்
முத்தம் பதித்திருப்பேன்…
உன்னை நான்
நேசித்ததால்…
என் பெயரினை எழுதவே
யோசிகிறேனடி…
என் கைவிரல் பட்ட
எழுதுகோல் கூட…
உன் பெயரையே
கிறுக்குதடி…
முடிந்தால் சொல்லிவிடடி
உன் பதிலை…
என்னை நீ
வெறுத்தாலும்…
நான் முழுமையாக
ஏற்று கொள்கிறேன்…
மௌனம் மட்டும்
கொள்ளதடி…
உள்ளிருந்து கொள்ளும்
உன் நினைவு…
மௌனத்தால் கொள்ளும்
உன்னையும்…
தாங்கிகொள்ள
முடியவில்லையடி என்னால்…
உள்ளிருந்து என்னை
கொள்கிறாயடி நீ…….
இப்படிக்கு உன்னில் கலந்த இனிய நினைவுகளுடன்.. …..
எதிரியை மன்னிக்களம் ஆனால் துரோகிக்கு வாழ்கேலா மன்னிப்புக்கு இடமே இல்லை நீ துரோகி நீ துரோகி உண்ணை கடவுள் கூட மன்னிக்கமாட்டான் நிச்சயம் என்றோ ஒரு நாள் தண்டனை உண்டு காலம் பதில் சொல்லும்
கண்களை விட கண்ணீர்க்கு தான் மதி அதிகம்……
கண்கள் உலகத்தை காட்டும்…….
கண்ணீர் உள்ளத்தை காட்டும்
காதல்
இருக்கும் வரை
இது போன்ற
கண்ணீர் கவிதைகளும்
இருக்கும்……!
இங்கு வார்த்தைகள்
மட்டுமே
மாறுகின்றன…..!
ஆனால்
வலிகள் மாறவில்லை..
கனவுகளின்
வழியே சங்கமிக்கும்
உன் நினைவுகளும்
கணப் பொழுதில்
கலைகின்றது
காரணமேதுமின்றி…
விழிகள் கண்ணீர்
சிந்தையில்…..
உண்மை என்பது அன்பாகும்
பெரும் பணிவு என்பது பண்பாகும்
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
சில நேரங்களில் உன்னை
தொலைப்பது போல் தோன்றினாலும்
பல நேரங்களில் உன் நினைவுகளிற்குள்
தொலைந்து போவது நான் தான் அன்பே